சர்தார் இயக்குநருக்கு தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ்!

Published On:

| By Kavi

“சர்தார்’ படத்தின்  வெற்றியை கொண்டாடும் வகையில் அப்படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர்.

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’.

ADVERTISEMENT

இந்திய ராணுவத்தின் உளவாளி வாழ்க்கை சம்பந்தமான கதை, உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், இதுவரை 90 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்துள்ளது.

இரண்டாவது வாரத்தில் கைதி படம் போன்று திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது. இந்த வெற்றி படகுழுவினர் எதிர்பாராத ஒன்று என்கின்றனர்.

ADVERTISEMENT

கார்த்தியின் திரை உலக வாழ்க்கையில் விருமன், பொன்னியின் செல்வன், வெற்றியை தொடர்ந்து மூன்றாவதாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கும் படம் சர்தார்.

இதுபோன்ற வெற்றியை தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் குறுகிய மாதங்களில்  அடுத்தடுத்து பெற்ற ஒரே நடிகர் என்கிற சாதனை நிகழ்த்த காரணமான படம் சர்தார்.

ADVERTISEMENT

இந்த வெற்றியைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.

இராமானுஜம்

கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கிச்சன் கீர்த்தனா : ராகி ரிப்பன் பக்கோடா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share