வேகமாக இயங்கும் அவசர வாழ்க்கையில் மாணவர்கள் முதல் பணிக்குச் செல்பவர்கள் வரை பலரும் காலை உணவைத் தவிர்த்தே வருகின்றனர். இந்த நிலையில், காலை உணவைத் தவிர்ப்பதால் வரக்கூடிய பிரச்சினைகள் பற்றி வயிறு மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர்கள் கூறும் விளக்கங்கள் இதோ…
“வேலைக்குச் செல்பவர்களும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த மாதிரியான தவற்றைச் செய்கின்றனர்.
இப்படி காலை உணவை எடுக்காமல் இருக்கும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸின் அளவும் குறைந்துவிடும். இதனால், சீக்கிரமே களைப்பு ஏற்படும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். சிலருக்கு மயக்கம்கூட வரலாம்.
உணவை செரிக்கக்கூடிய, என்சைம் (நொதி) அளவை பாசல் ஆசிட் அவுட்புட் (BASAL ACID OUTPUT) என்போம். நாம் சாப்பிடுகிற உணவை செரிப்பதற்கு, இந்த ‘என்சைம்கள்’ பயன்படுகின்றன.
இந்த என்சைம்களின் சுழற்சி, உணவின் சுழற்சியுடன் சேர்ந்தே நடைபெறுகிறது. இந்த என்சைம்கள் இரவு நேரத்தில் குறைவாகவும், ‘பீக் அவர்ஸ்’ என்று சொல்லப்படுகிற காலை 7 மணியில் இருந்து 11 மணி வரை, அதிகமாகவும் சுரக்கின்றன.
காலை உணவை உட்கொள்ளாமல் இருக்கும்போது இந்த நொதிகளின் சுரப்பு அதிகமாகி, வயிற்றின் சுற்றுப்பகுதிகளில் சின்னச் சின்ன காயங்களை ஏற்படுத்தும்.
தொடர்ச்சியாக உணவு உட்கொள்ளாமலேயே இருந்தால் ‘அல்சர்’ எனப்படும் வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மேலும், கணைய நீர், பித்த நீர் ஆகியவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், சுரக்கப்பட்ட என்சைம்கள் உடலின் பாகங்களையே அரிக்க ஆரம்பித்துவிடும்.
இதனால், நம் உள்ளுறுப்புகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காலை உணவை மிஸ் பண்ணாதீங்க” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ரகடா பாட்டீஸ்
மனசுல பெரிய அஜித் குமாருன்னு நினைப்பு… அப்டேட் குமாரு
அயலகத் தமிழர் தினம்… இத்தனை கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமா?
அருள்தாஸ் பற்றி அந்த விஷயம் தெரியுமா? – இன்ட்ரஸ்டிங் தகவல்கள்!
டிஜிட்டல் திண்ணை: கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி… பிரிந்து நிற்கும் எம்எல்ஏக்கள்!