புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
புரோ லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 15 போட்டிகளில் ஆடி 9 தோல்விகளை சந்தித்துள்ளது. 6 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 33 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இனி அந்த அணிபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமே.
தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் ஆறு லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன. இவை அனைத்திலும் வென்றாலும் கூட தமிழ் தலைவாஸ் அணி அதிகபட்சமாக 63 புள்ளிகளைதான் பெற முடியும். ஆனால், அப்படி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெறுவது கடினமான விஷயமாகும். புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலுள்ள மற்ற அணிகளுக்கும் இதே போன்ற வாய்ப்புகள் உள்ளன. எனவே, தமிழ் தலைவாஸ் அணி முதல் ஆறு இடங்களுக்குள் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது இனி நடக்காது.
புரோ கபடி லீக் தொடரில் புள்ளிகள் பட்டியலில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பாட்னா பைரேட்ஸ் 52 புள்ளிகளும், டபாங் டெல்லி 48 புள்ளிகளும், தெலுகு டைட்டன்ஸ் 48 புள்ளிகளும், புனேரி பல்தான் – 47 புள்ளிகளும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – 46 புள்ளிகளும், யு மும்பா – 46 புள்ளிகளும் 8. உபி யுத்தாஸ் – 43 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
இத இப்பதான் செய்யனுமா? : அப்டேட் குமாரு
கொங்கு ’உணவு’ பெஷ்டிவல் இல்ல… ’திருட்டு’ பெஷ்டிவல் – கொந்தளிக்கும் கோவை மக்கள்!