திரும்ப வந்துட்டோம்னு சொல்லு… சொந்த மண்ணில் வெற்றிவாகை சூடுமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி விளையாட்டு

இன்று (டிசம்பர் 22) இரவு 8 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி – பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை, தெலுங்கு டைட்டன்ஸ் எதிர்கொள்கிறது.

சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது.

மற்றொரு புறம் பாட்னா பைரேட்ஸ் 2 வெற்றி,  3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 12 போட்டிகளில் மோதியுள்ளன.

இதில் 6 முறை பாட்னா வென்றுள்ளது. 3 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் வென்றுள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவில்லை.

கடந்த 9 சீசன்களில் விளையாடி மூன்று முறை பாட்னா அணி சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. இதில் இருந்தே அந்த அணி எப்படிப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

எனினும் இந்த 1௦-வது தொடரை அந்த அணி தடுமாற்றத்துடன் தான் தொடங்கியுள்ளது. கடைசியாக பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸுடன் மோதி 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தமிழ் தலைவாஸில் நரேந்தர், அஜிங்கியா, சாஹில் குலியா, சாகர் என வலுவான வீரர்கள் உள்ளனர். அதேபோல பாட்னாவும் அங்கித், சச்சின் தன்வார், கிரிஷான் துல் என ஆட்டத்தையே தலைகீழாக மாற்றும் வீரர்களை கொண்டுள்ளது.

தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவியதால், தமிழ் தலைவாசை  வீழ்த்தி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பாட்னா பைரேட்ஸ் கடுமையாக முயற்சி செய்யும்.

யு மும்பாவுக்கு எதிராக தோல்வி அடைந்ததால் வெற்றியை சுவைத்திட தமிழ் தலைவாஸ் அணியும் கடுமையாக போராடும். எனவே இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளுமே வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. என்றாலும் சொந்த மண் என்பதால் ரசிகர்களின் ஆதரவுடன் பாட்னாவை வீழ்த்தி, தலைவாஸ் வெற்றிவாகை சூடவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஆனால் தமிழ் தலைவாஸ் கடைசிக்கட்ட சொதப்பல்களுக்கு பிரசித்தி பெற்றது  என்பதால், போட்டியின் முடிவை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா

நீண்டநாள் தோழியை மணந்த சென்னை வீரர்… ரசிகர்கள் வாழ்த்து மழை! 

நீக்கப்பட்ட பெயர் பலகை: ஸ்டாலினை சந்தித்த பொன்முடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *