வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவி, ரசிகர்களை கடும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. tamil thalaivas vs haryana steelers
1௦-வது சீசனில் தற்போது புரோ கபடி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. தமிழ்நாட்டின் சார்பாக தமிழ் தலைவாஸ் அணி இதில் இடம்பெற்று உள்ளது.
இதுவரை கோப்பையை கைப்பற்றவில்லை என்றாலும், இந்த முறை ரசிகர்கள் தமிழ் தலைவாஸ் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்.
அதற்கு ஏற்றவாறு ஆரம்பமே தலைவாஸ் அணி வெற்றியுடன் இந்த தொடரில் அடியெடுத்து வைத்தது. முதல் போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்திய, தலைவாஸ் 2-வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸிடம் 1௦ புள்ளிகளில் தோல்வியை தழுவியது.
மூன்றாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் பார்முக்கு திரும்பியது. ஆனால் அந்த வெற்றியை அடுத்தடுத்த போட்டிகளில் தக்க வைக்கவில்லை.
கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றியை கோட்டை விட்டு ஹாட்ரிக் தோல்வியை தழுவி இருக்கிறது.
யு மும்பா, பாட்னா பைரேட்ஸ் அணிகளுடன் தலா 13 புள்ளிகள் வித்தியாசத்திலும், கடைசியாக கடந்த 23-ம் தேதி நடைபெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியுடன் 1 புள்ளி வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியுள்ளது.
இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கடைசி 2 போட்டிகளிலும் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 25) இரவு 9 மணிக்கு, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொள்கிறது.
6 போட்டிகள் விளையாடி அதில் 4 போட்டியில் வெற்றியை பெற்று ஹரியானா அணி வலுவாக உள்ளது. புள்ளிப்பட்டியலிலும் அந்த அணி 6-வது இடத்தை தக்க வைத்துள்ளது.
ஆனால் தமிழ் தலைவாஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்தில் இருக்கிறது.
இதனால் இன்றைய ஆட்டம் ஒருதலைப்பட்சமாக செல்லுமா? இல்லை வெற்றிக்காக தமிழ் தலைவாஸ் போராடி ஆட்டத்தை விறுவிறுப்பாக எடுத்து செல்லுமா? என்பது தெரியவில்லை.
தமிழ் தலைவாசை பொறுத்தவரை சாஹில் சிங், அஜிங்கியா, ஹிமான்ஷு நார்வல் ஆகியோரின் ஆட்டத்தை பொறுத்தே வெற்றி அமையும்.
ஹரியானா அணியிலும் வினய், மோஹித் நந்தால், மோஹித் என வெற்றியை தட்டி செல்லக்கூடிய வலுவான போட்டியாளர்கள் இருகின்றனர்.
இதில் எந்த மூவர் கூட்டணி வெற்றிக்கனியை பறிக்கப்போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
2023 ஒரு பார்வை : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் முதல் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் வரை – என்ன நடந்தது?
மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன்: வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?
tamil thalaivas vs haryana steelers