PKL10: தெலுங்கு டைட்டன்ஸுடன் பலப்பரீட்சை… அவரு மட்டும் வேணாம் அலறும் ரசிகர்கள்!

புரோ கபடி விளையாட்டு

தன்னுடைய மூன்றாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பெங்களூரில் எதிர்கொள்கிறது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தற்போது புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 12 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் தமிழ்நாடு சார்பாக தமிழ் தலைவாஸ் அணி விளையாடி வருகிறது.

இன்று (டிசம்பர் 13) இரவு  8 மணிக்கு பெங்களூர் ஸ்ரீ காண்டிரவா உள்விளையாட்டு அரங்கத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில்  தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

தொடர்ந்து  இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் சூறாவளியாக மாறி எதிரணியை புரட்டி போட்டது. பெங்கால் வாரியர்ஸ் அணியுடனான இரண்டாவது போட்டியில் முயல்-ஆமை கதை போல முடிவுகள் அமைந்து எதிர்பாராத தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் இன்று தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதவுள்ளது. தலைவாஸ் 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 11 -வது இடத்தில் உள்ளது.

அதே நேரம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தமிழ் தலைவாஸும், முதல் வெற்றியை பதிவு செய்திட தெலுங்கு டைட்டன்ஸும் கடுமையாக முயற்சி செய்யும்.

இதனால் இன்றைய ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கடந்த போட்டியில் மோசமாக விளையாடி அணியின் தோல்விக்கு காரணமாக அபிஷேக் இருந்தார்.

எனவே அவருக்கு  பதிலாக மாசானமுத்து லக்ஷனன், சதீஷ் கண்ணன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்த மட்டில் அஜிங்கியா, சாகர், நரேந்தர் மூவரும் ஒன்றிணைந்து விளையாடி அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் வெற்றிவாகை சூடுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

கொள்முதல் விலை : பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

’20 வருடங்கள் காத்திருந்தேன்’ இணைந்து நடிப்பதை உறுதி செய்த இளம் நடிகர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *