புரோ கபடி போட்டியின் 10-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 22 போட்டிகள் நடைபெற்றுள்ளது. நாளை யு மும்பா, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதும் போட்டியாது புனேவில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இதுவரை இரண்டு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் பாட்னா பைரேட்ஸ் அணியானது தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளை வீழ்த்தி இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
கடைசியாக பெங்கால் வாரியர்ஸ் உடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடர்வதற்கு ஆயத்தம் காட்டி வருகிறது.

யு மும்பா அணியை பொறுத்தவரையில் யுபி யோதா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் குஜராத் ஜெயண்ட்ஸ், புனேரி பால்டன் அணிகளிடம் தோல்வியை தழுவியது.
இதனால் புள்ளி பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் போட்டியானது யு மும்பா அணிக்கு முக்கியமான போட்டியாகும்.
யு மும்பா அணி வீரர்கள் விவரம்
ரைடர்ஸ்
குமான் சிங், ஷிவம், ரோகித் யாதவ், ஜெய் பகவான், ருபேஷ், பிரணாய் ராணே, ஹெய்தரலி எக்ரமி, குணால், சவுரவ் பார்த்தே, அலிரெசா மிர்சாயின்.
டிபெண்டர்ஸ்
கிரிஷ் மாருதி எர்னாக், மகேந்தர் சிங், சுரிந்தர் சிங், கோகுல கண்ணன், ரிங்கு, ஷிவான்ஷ் தாகூர், பிட்டு, சோம்பிர், முகிலன் சண்முகம், விஸ்வந்த், அமிர்முகமது சபார்தனேஷ், ராம் அத்காலே.
பாட்னா பைரேட்ஸ் அணி வீரர்கள் விவரம்
ரைடர்ஸ்
ராகேஷ் நர்வால், மன்ஜீத், சச்சின், குணால் மேத்தா, சுதாகர். ரஞ்சித் நாயக், அனுஜ் குமார், சந்தீப் குமார், செங்க் வாய் சென்
டிபெண்டர்ஸ்
நீரஜ் குமார், மகேந்திரா செளத்ரி, தியாகராஜன் யுவராஜ், கிருஷ்ணன், மணீஷ், நவீன் ஷர்மா, அபினந்த் சுபாஷ், சஞ்சய், தீபக் குமார், சஞ்சய் சந்திரசேகர், ரோகித், டேனியல் ஓதிம்போ, அங்கித்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அவைக்கு வராத எம்.பி கூட சஸ்பெண்ட் : கனிமொழி பேட்டி!
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி கணக்கை துவங்கும்: பிரேமலதா உறுதி!
