வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (நவம்பர் 28) பதவியேற்றார்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலோடு, 14 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு, மகாராஷ்டிராவின் நான்டெட் மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
வயநாடு, ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, வயநாடு தொகுதியில் களமிறங்கினார். இதனால் நாடே இந்த தொகுதியின் தேர்தலை உற்று நோக்கியது.
நவம்பர் 13-ஆம் தேதி வயநாடு தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்தியன், பாஜக வேட்பாளர் ஹரிதாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி தொடக்கம் முதலே பிரியங்கா முன்னிலையில் இருந்தார். மொத்தம் 6, 22,338 வாக்குகள் பெற்ற பிரியங்கா, 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் இன்று வயநாடு மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்தி இந்தியில் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்கும் போது அரசியல் சாசன புத்தகத்தை தனது கையில் ஏந்தியிருந்தார் பிரியங்கா.
அதேபோல, நான்டெட் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவிந்த்ர சாவனும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு நாடாளுமன்றத்திலிருந்து சக காங்கிரஸ் எம்.பி-க்களுடன் பிரியங்கா வெளியே வந்தார். அப்போது ராகுல் காந்தி, “இருங்க… இருங்க… நான் ஒரு போட்டோ எடுத்துக்குறேன்” என்றார். இதனால் பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்கள் சிரித்தபடி போஸ் கொடுத்தனர். ராகுல் தனது செல்போனில் அவர்களை புகைப்படம் எடுத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
‘செக்யூலர்’ ‘சோஷலிஸ்ட்’ ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் அங்கங்களா?
“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” – ராமதாஸ் பதிலடி!