இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. priyanka deshpande marraige hits social media

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.
அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார்.

விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் பதிந்தார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்று, அதில் மக்களின் ஆதரவுடன் இரண்டாவது வெற்றியாளர் ஆனார்.

இதற்கிடையே பிரியங்காவின் அம்மா, தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று தனது காதலரான வசி என்பவரை திடீரென திருமணம் செய்துள்ளார். டிஜே மற்றும் ஈவெண்ட் மேனஜராக பணியாற்றி வருகிறார் வசி. இருவீட்டு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில் அமீர் – பாவனி ஜோடி, நிரூப், சுனிதா, அன்ஷிதா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சமீபத்தில் தன்னுடைய பக்கெட் லிஸ்ட் பற்றி பிரியங்கா அளித்த பேட்டியில், “பிக் பாஸ் போக வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது.. இனி நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.. என்னை என்னுடைய கணவர் தாங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
தற்போது அவரது திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து குவிந்து வருகிறது.