லண்டனில் நடைபெற்ற இசை கச்சேரியில் பிரியங்கா சோப்ரா நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா, இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையானார். தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த மாதம் வெளியான ‘லவ் அகேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார்.

இந்தநிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகி பெயோன்ஸ் இசைக்கச்சேரி நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா நடனம் ஆடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தவகையில், Jerryxmimi என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ள வீடியோவில், இசைக்கச்சேரி நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா பாடல் பாடி நடனமாடி தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இசைக்கச்சேரியில் கலந்து கொண்டது குறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் “மிகச்சிறப்பான அனுபவத்திற்கு நன்றி. பெயோன்ஸ் நீங்கள் எப்போதும் அரசி தான்” என்று பதிவிட்டுள்ளார். இந்த இசைக்கச்சேரியில் பிரியங்கா சோப்ரா தாய் மது சோப்ராவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியானது!
ஜூன் 7ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்: திமுக
