காதலருடன் சுற்றுலா சென்ற பிரியா பவானி சங்கர்… வைரல் புகைப்படம்..!

Published On:

| By christopher

பிரபல தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ஆம் ஆண்டு “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ADVERTISEMENT

சமீபத்தில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான “ரத்னம்” திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது தனது காதலருடன் ஒரு சின்ன வெகேஷனுக்கு சென்றுள்ள பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ADVERTISEMENT

பிரியா பவானி சங்கர் அவரது கல்லூரி காலத்தில் இருந்தே ராஜ்வேல் என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது அவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

ADVERTISEMENT

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர் தனது காதலர் ராஜ்வேலுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு இந்த சுற்றுலா பயணம் தான் காரணம் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அடுத்ததாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2, ஜீப்ரா, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : இந்தியா கூட்டணி கூட்டம் முதல் இந்தியா-அயர்லாந்து போட்டி வரை!

T20 World Cup 2024: வெற்றி பெரும் அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவு கோடியா?

டஃப் பைட் கொடுத்த அதிமுக, அமமுக: அசராத திமுக

கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் – பருப்பு அரைத்த குழம்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share