பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர் கட்டாயம்: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Published On:

| By Selvam

பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு சில வாகனங்கள் முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று வந்த புகார்களின் அடிப்படையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தனியார் பள்ளி இயக்குனர் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில்,

“வாகனங்களில் ஜிபிஎஸ் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்

பள்ளி வாகனங்களில் ஒரு பெண் உதவியாளரை கட்டாயம் பணியமர்த்த வேண்டும்

10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும்.

ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஓட்டுநர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்பதை சோதனை செய்த பின்னர் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.

பள்ளி வாகனங்கள், ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆர்.எஸ்.எஸ்.சுக்கே சவால் விட்ட அண்ணாமலை: கோவையில் நடப்பது என்ன?

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share