ஜி.எஸ்.டி 2.0 என்பது மக்களின் சேமிப்பு பண்டிகைக்கான தொடக்கம். பிரெட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். டிவி, ஸ்கூட்டர் போன்ற பொருட்களின் விலையும் நாளை முதல் குறையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சரக்கு விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது என தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி 56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு அடுக்குகளிலிருந்தது. 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் தற்போது 375 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி பூஜ்ஜியம் ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் நாளை வரும் 22ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 20) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது நவராத்திரி விழாவிற்கான வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் அமலாகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும். நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குறைந்த செலவில் பெண்களும், விவசாயிகளும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் அனைவரின் குறைகளும் களையப்பட்டுள்ளன என்றார். ஜிஎஸ்டி வரி குறைப்பு பல்வேறு வரி விகிதங்களை மாற்றி எளிமையாக்கியது. ஜிஎஸ்டி 2.O இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும். அனைத்து மாநிலங்களும் இதில் சம பங்குதாரராக இருப்பார்கள்
ஜி.எஸ்.டி 2.0 என்பது மக்களின் சேமிப்பு பண்டிகைக்கான தொடக்கம். பிரெட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். டிவி, ஸ்கூட்டர் போன்ற பொருட்களின் விலையும் நாளை முதல் குறையும். தற்போது 99 சதவிகித பொருட்கள் 5 சதவிகித வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஒரே நாடு ஒரே வரி என்பது தற்போது முழுமை பெற்றுள்ளது என்றார்.
மேலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பொருள்களை உள்நாட்டில் தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும். வருமான வரிச்சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தாண்டு ரூ.2.5 லட்சம் கோடி வரை செலவு குறையும். ஏழைகள், புதிய நடுத்தர வர்கத்தினராக உயர இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு உதவும். ஜிஎஸ்டி வரி குறைப்பால், நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
