ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் புதினை சந்திக்கும் பிரதமர் மோடி

By Mathi

|

Published on 28 Aug 2025, 11:26 PM

PM Narendra Modi

சீனாவில் நடைபெறும் ஷாய்ங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் ஆகியோரை தாம் சந்தித்து பேச இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு (ஆகஸ்ட் 28) டெல்லியில் இருந்து ஜப்பான் மற்றும் சீனாவுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறேன்.

ADVERTISEMENT

எனது பயணத்தின் போது, கடந்த பதினொரு ஆண்டுகளில் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள எங்கள் சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் அடுத்த கட்டத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்துவோம். எங்கள் ஒத்துழைப்புக்கு புதிய ஆற்றலை வழங்கவும், பொருளாதார மற்றும் முதலீட்டு உறவுகளின் நோக்கம் மற்றும் லட்சியத்தை விரிவுபடுத்தவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்திகள் உள்ளிட்ட புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முயற்சிப்போம். இந்தப் பயணம், நமது மக்களை இணைக்கும் நமது நாகரிக பிணைப்புகள் மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

சீனா பயணம்

ADVERTISEMENT

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பானில் இருந்து நான் சீனாவுக்குச் செல்வேன். இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தீவிரமான மற்றும் ஆக்கபூர்வமான உறுப்பினர். எங்கள் தலைமையின்போது, புதுமை, சுகாதாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் புதிய யோசனைகளை அறிமுகப்படுத்தி ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளோம்.

பகிரப்பட்ட சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.

ADVERTISEMENT

ரஷ்யா அதிபர் புதின்

உச்சிமாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிற தலைவர்களுடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

ஜப்பான் மற்றும் சீனாவிற்கான எனது பயணம் நமது தேசிய நலன்களையும் முன்னுரிமைகளையும் மேம்படுத்தும் என்றும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்றுவதில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை உருவாக்க முக்கிய பங்களிக்கும் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel