எம்.சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலை குறைப்பு : அரசு உத்தரவு!

Published On:

| By Kavi

Price reduction of gravel

தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி சாண்ட் ஆகியவற்றின் விலையை குறைத்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. Price reduction of gravel

தமிழகத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவற்றின் விலை உயர்ந்து வந்தது. ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் அதிகரித்து விற்பனையானது.

ADVERTISEMENT

இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த கட்டுமான பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. Price reduction of gravel

இந்தநிலையில்  சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (27.04.2025) நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன் தலைமையில், கல்குவாரி. கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதன்படி, கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000/- குறைத்து விற்பனை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33/- என ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி,  புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் எ. சரவணவேல்ராஜ், கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். Price reduction of gravel

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share