ஜப்பானியர்கள் டுனா மீன் என்று அழைக்கப்படும் சூரை மீன்களை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் முள் அவ்வளவாக இருக்காது. சாப்பிடுவதற்கும் மிருதுவாக மிக டேஸ்டாக இருக்கும். சூரை மீனில் கொலஸ்ட்ரால், வைட்டமின் A, D, புரோட்டீன், உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன்களில் இந்த சூரை மீன்களும் ஒன்று. இவற்றை கானாங்கெளுத்தி மீன் என்றும் கூறுவார்கள்.
ஜப்பானில் இந்த மீன்களுக்கு அதிக விலை உண்டு. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு டோக்கியோ நகரில் டுனா மீன் ஏலம் நடந்தது,. அதில், புளுஃபின் டுனா ரகத்தை சேர்ந்த மீன் ஒன்று 11 கோடிக்கு ஏலம் போனது. ஜப்பான் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இரண்டாவது மீன் இதுவாகும். இந்த மீன் 276 கிலோ இருந்தது. Onodera ஹோட்டல் குழுமம் இந்த மீனை ஏலம் எடுத்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டோக்கியோ மீன் சந்தையில் 278 கிலோ எடை கொண்ட டுனா மீன் ஏலத்துக்கு வந்தது. இந்த மீன் 18. 19 கோடிக்கு ஏலம் போனது. ஜப்பான் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மீன் இதுதான்.சுஷி ஷம்னல் ரெஸ்டாரென்ட் இந்த மீனை ஏலம் எடுத்தது.
இந்த சூரை மீனை காயவைத்தால், அதை மாசி கருவாடு என்று கூறுவார்கள். மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, போன்ற உள்ளுறுப்புகளை பலப்படுத்தக்கூடியது இந்த கருவாடு. திருமணமான தம்பதிகளுக்கு இந்த கருவாடை தினமும் சமைத்து கொடுத்தால், உயிரணு உண்டாக்கி, கரு முழு ஆரோக்கியத்தோடு வளரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்