மிடில் கிளாஸ் வாங்கவே முடியாதா?  தங்கம் விலை தொடர் உயர்வு ஏன்?

Published On:

| By Kavi

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 21) 72 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. price of gold continuously rising

தங்கம் விலை கடந்த 9ஆம் தேதியில் இருந்து  தொடர்ந்து உயர்ந்து  கடந்த 12ஆம் தேதி தேதி ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனை ஆனது. அப்போது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. 

ADVERTISEMENT

இந்த விலை மேலும் உயர்ந்து  18-04-2025 அன்று 22 கேரட் ஆபரணத் தங்கம்  ரூ.71,560க்கு விற்பனையானது. 

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120க்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

இப்படி தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சன் நியூஸுக்கு அளித்த பேட்டியில்,  “தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் மூன்று சதவிகிதம் ஜிஎஸ்டி மற்றும் ஸ்டம்பிங் சார்ஜ்  எல்லாம் போட்டால் , ஒரு கிராம் தங்கத்தை காயினாக வாங்கினால் கூட 9500 ரூபாயை தாண்டும். 

இன்னும் தங்கம் விலை ஏறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் மற்ற செண்ட்ரல் பேங்க்குகள் எல்லாம் டாலரை விற்றுவிட்டு தங்கத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  சீனாவும், ரஷ்யாவும் தங்கம் வாங்கும் வரை விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்.  அமெரிக்கா ரஷ்யாவின் பணத்தை  முடக்கியிருக்கிறது. அப்போது முதல் டாலரை வாங்குவதை விட்டுட்டு தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது” என்று கூறினார். 

ADVERTISEMENT

தங்கம் விலை இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களால் தங்கம் வாங்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. price of gold continuously rising

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share