மதுபானங்கள் விலை இன்று (ஜூலை 19) முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மது வருவாயை அதிகரிக்கும் வகையில் மதுபானத்தின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அரசு மூடிய நிலையில் இன்று மதுபானங்கள் விலை உயர்வு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. மதுபானத்தின் விலை அதிகரித்திருப்பது மது பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
விலை பட்டியல்

