குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுள்ளார். President has accepted Jagdeep Dhankar resignation
கடந்த 2022 ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். 2027 வரை இவரது பதவிக்காலம் உள்ளது.
ஆனால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றிரவு அறிவித்தார்.
மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை தலைவராகவும் இருந்ததால், அவரது ராஜினாமா கடிதத்தை தொடர்ந்து இன்று (ஜூலை 22) மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் தலைமையில் அவை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் ஜெகதீப் தன்கர் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுள்ளார்.
இவரது ஒப்புதல் கடிதம் தற்போது உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் துணை குடியரசு தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். President has accepted Jagdeep Dhankar resignation
