”இனி எந்த பதிவும் போட மாட்டேன்”: பிரேமம் இயக்குனர் முடிவு!

Published On:

| By Monisha

Premam director decided not to post any more

‘நேரம்’, ‘பிரேமம்’ போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதால் படங்கள் இயக்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  இவரது இந்த அறிவிப்பிற்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வருத்தங்களை தெரிவித்தனர்.

அதன்பிறகு அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் சில கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

ADVERTISEMENT

Premam director decided not to post any more

இந்நிலையில் இனி தனது சமூக வலைத்தளங்களில் எந்தப் பதிவும் பகிர மாட்டேன் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது எனது அம்மா, அப்பா, சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. மேலும் சில உறவினர்கள் அவர்களை பயமுறுத்துவதால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் தான் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள்.

ADVERTISEMENT

அதனால், அப்படியே செய்ய உள்ளேன்” எனக் கூறியுள்ளார். அல்போன்ஸ் புத்திரன் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு!

ஜனவரி 22 : மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share