‘வணங்கான்’ ஷூட்டிங்கின் போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக, ‘பிரேமலு’ நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பாலா தற்போது அருண் விஜயை நாயகனாக வைத்து ‘வணங்கான்’ படத்தினை இயக்கி வருகிறார். முதலில் இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து பின்னர் அவர் விலகியதால், தற்போது அருண் விஜய் நாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த நிலையில் ‘பிரேமலு’ புகழ் நடிகை மமிதா பைஜூ லேட்டஸ்ட்டாக அளித்த பேட்டி ஒன்றில், தான் ‘வணங்கான்’ படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தினை தெரிவித்து இருக்கிறார்.
அதில், ”வணங்கான்’ படத்தில் வில்லடிச்ச மாடன் என்கிற ஒரு பாடல் காட்சி இருந்தது. இந்த காட்சியில் நான் டிரம்ஸ் மாதிரியான ஒரு வாத்தியத்தை அடித்தபடி பாடிக்கொண்டே ஆடவேண்டும். அப்போது பாலா நான் அதை செய்து காட்டவா? என்று கேட்டார். இல்லை நானே செய்கிறேன் என்று கூறினேன்.
Director Bala hits MamithaBaiju on the sets of Vanangaan & later on she opted out of the project !!
No wonder why #Suriya dropped the Project & moved on, great decision 👏👏pic.twitter.com/qbSS247wjV
— AmuthaBharathi (@CinemaWithAB) February 28, 2024
அப்படி என்றால் போய் அதை செய் என்றார். அந்த சமயத்தில் நான் தயாராகவில்லை. அதோடு அவர்கள் பாடுவதும் எனக்கு புரியவில்லை. எனக்கு பயிற்சி எடுத்துக் கொள்ள போதுமான நேரம் கிடைக்கவில்லை என்பதால், மூன்று டேக்கிற்கு பின்னரும் அந்த காட்சியை என்னால் சரியாக செய்ய முடியவில்லை.
இதைப்பார்த்த பாலா பின்னால் இருந்து என்னுடைய தோள்பட்டையில் அடித்தார்”, என ஷூட்டிங்கில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக, வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இயக்குநர் பாலாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மாநில அரசின் தடைகளைத் தாண்டி வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்”: மோடி