ராஜ்யசபா சீட்… ஒரே வார்த்தையில் பிரேமலதா சொன்ன பதில்!

Published On:

| By Selvam

Premalatha Vijayakanth clarifies rajya sabha seat

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக 4, அதிமுக 2 இடங்களுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது ராஜ்யசபா சீட் குறித்து அதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார்.

ஆனால், தாங்கள் அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். இதனால், அதிமுக, தேமுதிக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டது.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? என்று பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர்கள் இன்று (மே 27) கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரேமலதா, “பொறுத்திருங்கள். பொறுமை கடலினும் பெரிது” என்றார். Premalatha Vijayakanth clarifies rajya sabha seat

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share