2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் கடலூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடலூரில் உரிமை மீட்பு மாநாடு இன்று ஜனவரி 9-ந் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டை தேமுதிக கொடியேற்றி பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடைசி தீர்மானமாக, “2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது” என நிறைவேற்றப்பட்டது.
