சென்னை மெட்ரோ பணியிடங்களில் மழைநீர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

Published On:

| By christopher

precaution take place chennai metro

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்  மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டதிட்டப் பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

குறிப்பாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, மேடவாக்கம் – பெரும்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி முதல் போரூர் வரை சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

தற்போது பூந்தமல்லி முதல் போரூர் வரை நெடுஞ்சாலையில் 3.7 கி.மீ நீளத்துக்கு சாலை போடப்பட்டு, சீரமைப்புப் பணிகள் 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.

ஆற்காடு சாலையில் 11.6 கி.மீ. சாலைபோடப்பட்டு, 87 சதவிகித சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ADVERTISEMENT

precaution take place chennai metro

அதேபோல, மேடவாக்கம் சாலையில் 2 கி.மீ. நீளத்துக்கு சாலை போடப்பட்டு, 65 சதவிகித சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த சாலைகளில் வாகனங்கள் சுலபமாகச் செல்ல முடியும். திருவொற்றியூர், மாதவரம், மற்றும் ஓ.எம்.ஆர். நெடுஞ்சாலைகளிலும் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுவிட்டன.

மேலும், வடகிழக்குப் பருவ மழையைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் சாலை சீரமைக்கும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமடைந்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்  மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற 350 மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சி உடன் இணைந்து பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதேபோன்று, சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்தால் அந்தச் சாலைகள் உடனே சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

50 சதவிகிதம் விசைத்தறி உற்பத்தி குறைப்பு: காரணம்  என்ன?

Bigg Boss 7 Day 33: பிரதீப்புக்கு ரெட் கார்டு… கமல் தூவிய அரசியல் நெடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share