கிச்சன் கீர்த்தனா: இறால் கஞ்சி

Published On:

| By Selvam

Prawn porridge Recipe in Tamil

நலங்களை அள்ளித்தரும் இறால் எடை குறைப்பதில் மட்டுமல்ல… இறாலிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பலவிதங்களிலும் நலம் பயப்பவை. குறிப்பாக, பார்வைச் சிதைவைத் தடுப்பதிலும், மூப்புத் தோற்றத்தைத் தள்ளிப்போடுவதிலும், எலும்பு ஆரோக்கியத்திலும் இறால்கள் பெரிதும் பங்காற்றுகின்றன. அப்படிப்பட்ட இறாலில் சுவையான கஞ்சி தயாரித்து, சூடாக அருந்துங்கள்… குளிரான சூழ்நிலையை இதமாக்குங்கள்.

என்ன தேவை?

அரிசி – ஒரு கப்
தண்ணீர் – 8 கப்
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்து, நரம்பு நீக்கவும்)
துருவிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன் ஸ்டார்ச் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

டாப்பிங் செய்ய…

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்து, நரம்பு நீக்கவும்)
மஷ்ரூம் – 100 கிராம் (துண்டுகளாக்கவும்)
மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

அலங்கரிக்க…

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

இறால், இஞ்சி, வெங்காயத்தாள், கார்ன் ஸ்டார்ச் ஆகியவற்றை ஒரு சின்னக் கிண்ணத்தில் சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்துக் கலந்து, கொதிக்கவிட்டு, தீயைக் குறைத்து அடிக்கடி கிளறவும். அரிசி கிட்டத்தட்ட வெந்த பிறகு இறால் கலவையைச் சேர்க்கவும். இறால் வெந்து கலவை (கஞ்சி) கெட்டியாகும் வரை மேலும் சிறிது நேரம் வேகவிடவும். நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவிட்டு இஞ்சி சேர்த்து மஷ்ரூம், இறால் சேர்க்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். வேகும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். கஞ்சியை ஒரு சிறிய பவுலில் சேர்த்து மேலே மஷ்ரூம் – இறால் டாப்பிங், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: இறால் துவையல்

கிச்சன் கீர்த்தனா: இறால் ஸ்ப்ரிங் ரோல்

அரசியல் சூப்பர் ஸ்டார் : சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்!

திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் கைது… எடப்பாடியை குற்றஞ்சாட்டிய கே.என்.நேரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share