2026 தேர்தலுக்கான விசில் சின்னம் – பிரவீன் சக்கரவர்த்தி அதிரடி பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் வரும் ஜனவரி 25ம் தேதி மாமல்லபுரத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஜனவரி 22) தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது. இப்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் ஓட்டத்திற்கு தயாராகி விட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார் .

ADVERTISEMENT

திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்தை நடைபெற்று வரும் நிலையில் பிரவீன் சக்கர வர்த்தி தொடர்ந்து தவெகவிற்கு ஆதரவாக கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே தேர்தல் நெருங்கும் சூழலில் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை நேரில் சந்தித்தது காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share