பேக் அடித்த பிரசாந்த்: ‘அந்தகன்’ ரிலீஸ் தேதி மாற்றம்… இதுதான் காரணமா?

Published On:

| By Selvam

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரனா, தபு ஆகியோர் நடிப்பில் இந்தியில் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டப் படம் அந்தாதூன்.

இப்படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் வாங்கினார். முதலில் இப்படத்தை இயக்குனர்கள் மோகன் ராஜா, ஜே.ஜே.ஃபெட்ரிக் ஆகியோர் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர்கள் படத்தில் இருந்து விலகினர்.

இதனையடுத்து தியாகராஜனே படத்தை இயக்குவதென முடிவெடுத்து, 2021-ல் படத்தின் வேலைகளை ஆரம்பித்தார். ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.

ஒருவழியாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அந்தகன் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

இந்தநிலையில், ஜூன் 13-ஆம் தேதி அந்தகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால், இந்த ரேஸில் இருந்து அந்தகன் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரசாந்த் நடித்த அந்தகன், தியேட்டரில் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநர் பதவி நீட்டிப்பா? நான் ஜனாதிபதி இல்லை… ஸ்டாலின் பதில்!

Paris Olympics 2024: மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு… அடித்து ஆடிய பி.வி.சிந்து, லவ்லினா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share