தேர்தல் முடிவுகள்… என்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது: பிரசாந்த் கிஷோர்

Published On:

| By Selvam

கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள், கருத்து கணிப்பு முடிவுகளுக்கு முற்றிலும் மாறாக அமைந்தது.

குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளின் படி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 350 – 400 இடங்களை பிடிக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 150 முதல் 200 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தன. தேர்தல் முடிவுகளின் படி என்டிஏ கூட்டணிக்கு 293 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 232 இடங்களும் கிடைத்துள்ளது.

இந்தநிலையில், என்னுடைய தேர்தல் கருத்து கணிப்பு தவறாகிவிட்டதால், இனிமேல் எண்ணிக்கை குறித்து நான் பேசப்போவதில்லை என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தேர்தல் வியூக நிபுணரான நான் எண்ணிக்கைக்குள் சிக்கியிருக்கக்கூடாது. கடந்த இரண்டு வருடங்களாக தான் எண்களை கூறி வந்தேன். என்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது. இதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இனிமேல் எத்தனை தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெற்றி பெரும் என்ற எண்ணிக்கையை நான் அறிவிக்க மாட்டேன். பாஜக 300 இடங்களில் வெற்றி பெறும் என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்கள் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்!

தமிழகத்தில் பக்ரீத் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share