ADVERTISEMENT

‘பிரதீப் ரங்கநாதனின் டியூட்’ : எவ்வளவு வசூலித்தது தெரியுமா?

Published On:

| By Kavi

டியூட் திரைப்படம் வசூல் குறித்து மைத்ரி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

’கோமாளி’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, ‘லவ் டுடே’வில் நாயகன் ஆன பிரதீப் ரங்கநாதன், ‘டிராகன்’ வெற்றிக்குப் பிறகு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகி விட்டார்.

ADVERTISEMENT

இவரது நடிப்பில் தீபாவளி வெளியீடாக டியூட் திரைப்படம் வெளியானது. மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ADVERTISEMENT

படம் வெளியாகி 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இந்தியாவில் 60 கோடி ரூபாயும், வெளிநாட்டில் ரூ30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் ‘டியூட்’ தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ், படம் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த பதிவில் , பாக்ஸ் ஆபிஸில் டியூட் படம் தனது வசூலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 5 நாட்களில் உலகம் முழுவதும் 95 கோடி ரூபாயை கடந்து வசூலித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share