நீலகிரி, கோவையில் கனமழை… பிரதீப் ஜான் சொன்ன ரிப்போர்ட்!

Published On:

| By Selvam

pradeep john says nilgiri coimbatore

கடந்த மே 24-ஆம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்திலும் அதன் தாக்கம் நிலவுகிறது. pradeep john says nilgiri coimbatore

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நேற்றும் இன்றும் (மே 25, 26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35.3 செமீ மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில்,

கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 353 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பார்சன் பள்ளத்தாக்கு, மேல் பவானி மற்றும் முக்கூர்த்தி ஆகிய இடங்களில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடகு, வயநாடு, சிக்மகளூர், ஹாசன் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், உடுப்பி மற்றும் தட்சிண கன்னடாவிலும் அதிக மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு… ( மி.மீ)

அவலாஞ்சி – 353 , பார்சன் பள்ளத்தாக்கு – 334, போர்த்திமுண்ட் – 320, மேல் பவானி – 298, முக்கூர்த்தி அணை – 183, எமரால்டு – 182 நடுவட்டம் ஏஆர்ஜி – 154, கூடலூர் – 153, நெல்லியம் – 144

கோவை மாவட்டம்… மழை அளவு ( மி.மீ)

சின்னக்கல்லார் – 213
சிறுவாணி அடிவாரம் – 128
சின்கோனா – 124
கீழ் நீரார் – 124
பரம்பிக்குளம் – 120
வால்பாறை பிஏபி – 114
வால்பாறை தாலுகா அலுவலகம் – 109
வால்பாறை ஏஆர்ஜி – 101
சோலையார் அணை – 100

இவ்வாறு தனது பதிவில் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். pradeep john says nilgiri coimbatore

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share