வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) இரவு அல்லது நாளை அதிகாலை (டிசம்பர் 1) கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் மரக்காணம் – மகாபலிபுரம் இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும்.
எனவே, புயல் கரையை கடக்கும் வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து கொண்டே இருக்கும். புயல் எவ்வளவு தாமதமாகிறதோ, அவ்வளவு அதிகமாக மழை இருக்கும். குறிப்பாக அடுத்த 12 – 18 மணி வரை கனமழை நீடிக்கும்
இன்று மாலை முதல் இரவு வரை கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….
“ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஸ்டாலின் பேட்டி!