விஜய்யின் ஹிட் பாடலை டைட்டிலாக வைத்த பிரபு தேவா படக்குழு!

Published On:

| By Monisha

prabhu deva next movie title

நடிகர் பிரபு தேவா இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஓர் புதிய படத்தில் நடித்து வருவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. சக்தி சிதம்பரம் – பிரபு தேவா கூட்டணியில் வெளியான சார்லி சாப்ளின் 1, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இந்த படத்தில் நடிகர் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார். நடிகர்கள் யாஷிகா ஆனந்த், யோகி பாபு, அபிராமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் இந்த படத்தின் கதைப்படி, நடிகர் பிரபு தேவா கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளாராம். க்ளோஸ் அப் காட்சிகளில் கண்களை சிமிட்டாமல், மூச்சு விடாமல் மிகவும் தத்துரூபமாக நடித்து அசத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. சக்தி சிதம்பரம் – பிரபு தேவா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு “ஜாலியோ ஜிம்கானா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு “ஜாலியோ ஜிம்கானா” டைட்டிலை வெளியிட்டார்.

ADVERTISEMENT

தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் அந்த படத்தில் பிரபு தேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் செம ட்ரெண்டானதை தொடர்ந்து தற்போது அது பிரபு தேவா பட டைட்டிலாக மாறிவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை!

IPL2024: ‘ஆரம்பிக்கலாங்களா’ ஐபிஎல் கேப்டனாக தோனி படைத்த புதிய சாதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share