90 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ள பிரபு தேவா

Published On:

| By Monisha

Prabhu Deva acted as dead body

இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா பெயரிடப்படாத ஓர் புதிய படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே சக்தி சிதம்பரம் – பிரபு தேவா கூட்டணியில் வெளியான சார்லி சாப்ளின் 1, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்துள்ளனர். Prabhu Deva acted as dead body

டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

நடிகை யாஷிகா ஆனந்த், நடிகர்கள் யோகி பாபு, அபிராமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியிருக்கிறது.

ADVERTISEMENT

அது என்னவென்றால், தென்காசியைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஒரு இறந்த நபருடன் கொடைக்கானல் வரை பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் சிக்கி கொள்கிறது. அந்த அசாதாரணமான சூழ்நிலையில் இருந்து அந்த குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தின் கதைப்படி, நடிகர் பிரபு தேவா கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளாராம். க்ளோஸ்அப் காட்சிகளில் கண்களை சிமிட்டாமல், மூச்சு விடாமல் மிகவும் தத்துரூபமாக நடித்து அசத்தியுள்ளாராம் பிரபு தேவா.

ADVERTISEMENT

இதற்கு முன் நடிகர்கள் ஊர்வசி, ரேவதி, ரோகிணி இணைந்து நடித்த மகளிர் மட்டும் படத்தில் நடிகர் நாகேஷ் அவர்கள் 15 நிமிடங்கள் பிணமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு தேவா – சக்தி சிதம்பரம் இணைந்துள்ள இந்த 3வது படத்திற்கு மக்களிடமே டைட்டிலுக்கான ஆலோசனை கேட்கப்படும் என்று இயக்குனர் சக்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். Prabhu Deva acted as dead body

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

மகளிர் உரிமைத் தொகை : குறுஞ்செய்தி வந்ததா?

‘லால் சலாம்’ காட்சிகள் டெலீட் ஆகிவிட்டதா?

ஜப்பான், ஜிகர்தண்டா 2 – சிறப்பு காட்சிக்கு அனுமதி!

Bigg Boss 7 Day 38 : அம்பலமான நிக்‌சனின் ஆபாச கமெண்ட் – ஒன்னும் செய்யாத ‘பிக் பாஸ் ஃபெமினிஸ்ட்ஸ்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share