ADVERTISEMENT

பிரபாஸ் – பிரித்விராஜின் சலார் எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!

Published On:

| By Manjula

prabhas salaar movie review

பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இன்று (டிசம்பர் 22) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் படம் சலார். இதில் பிரபாஸ் – பிரித்விராஜூடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா ரெட்டி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

prabhas salaar movie review

ADVERTISEMENT

கேஜிஎப் பிளாக்பாஸ்டருக்கு பின் பிரஷாந்த் நீல் இயக்கி இருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? இப்படம் குறித்த ரசிகர்களின் விமர்சனம் என்ன? என்பதை கீழே பார்க்கலாம்.

பார்கவ் என்னும் ரசிகர், ” படம் நிச்சயம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. திரையரங்கு சென்று பாருங்கள்,” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

https://twitter.com/ThisIsBhargavN/status/1738039732163297475

ஜெய் கிரண் என்னும் ரசிகர், ” பிளாக்பஸ்டர் திரைப்படம். பிரபாஸ் நடிப்பு, பிரஷாந்த் நீல் இயக்கம் இரண்டுமே வேறு லெவல்,” என தெரிவித்து இருக்கிறார்.

ADVERTISEMENT

நடிகர் நிகில் சித்தார்த்தா இதுகுறித்து, ” சலார் பிளாக்பஸ்டர் திரைப்படம். பிரபாஸ் திரையில் தோன்றும் ஒவ்வொரு முறையும் சிலிர்க்க செய்கிறது. நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்,” என தெரிவித்துள்ளார்.

அதே நேரம், ”சலார் வெறும் ஆவரேஜ் படம் தான். பிரபாஸின் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருந்தன,” என ராஜு என்னும் ரசிகர் தெரிவித்து உள்ளார்.

விமர்சகர் சதீஸ் குமார், ” பிரபாஸின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் ஒரு ஆக்ஷன் படம்,” என தெரிவித்து இருக்கிறார்.

ஒருபக்கம் சலார் பிளாக்பஸ்டர் என விமர்சனங்கள் எழுந்தாலும் மறுபுறம் கலவையான விமர்சனங்களை பெறவும் தவறவில்லை

மொத்தத்தில் சலார் பிரபாஸ் ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் ட்ரீட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share