இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி இருக்கும் சலார் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று (டிசம்பர் 22) வெளியானது. சாஹோ, ஆதிபுருஷ் போன்ற படங்களுக்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் முதல் காட்சி முதலே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
எனினும் பான் இந்திய படமாக வெளியான சலார் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 178.7 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரித்வி ராஜ் இன்று அறிவித்துள்ளார்.
The most violent man announced his arrival ⚠️#SalaarCeaseFire hits 𝟏𝟕𝟖.𝟕 𝐂𝐑𝐎𝐑𝐄𝐒 𝐆𝐁𝐎𝐂 (worldwide) on the opening day!
𝐓𝐡𝐞 𝐛𝐢𝐠𝐠𝐞𝐬𝐭 𝐨𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐚𝐧𝐲 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐅𝐢𝐥𝐦 𝐢𝐧 𝟐𝟎𝟐𝟑 💥#BlockbusterSalaar #RecordBreakingSalaar… pic.twitter.com/yJJfW9OA2t
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) December 23, 2023
இதன்மூலம் 2023ஆம் ஆண்டு வெளியான அனைத்து திரைப்படங்களையும் விட முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படமாக சலார் மாறியுள்ளது.
முன்னதாக தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பின் படி, முதல்நாள் வசூலில் விஜய்யின் லியோ ரூ.148.5 கோடியும், பிரபாஸின் ஆதிபுருஷ் ரூ.136.8 கோடியும், ஷாருக்கானின் ஜவான் ரூ.129.6 கோடியும், பதான் ரூ.104 கோடியும், ரன்பீர் கபூரின் அனிமல் ரூ.115.9 கோடியும் பெற்றிருந்தன.
இந்ந நிலையில் முதல்நாள் வசூலில் அனைத்து படங்களையும் மிஞ்சி சாதனை படைத்துள்ளது சலார்.
குறிப்பாக தெலுங்கு திரையுலக நடிகரான பிரபாஸின் சலார், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் இப்படம் ரூ.70 கோடி வசூல் செய்துள்ளது.
தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் ‘சலார்’ படத்தின் ஓப்பனிங் டே வசூல் நன்றாக அமைந்துள்ளது. அதன்படி கர்நாடகாவில் ரூ.12 கோடியும் , கேரளாவில் ரூ.5 கோடியும் சலார் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த மூன்று படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இந்தநிலையில் சலார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இதுக்கொண்ணும் கொறைச்சல் கெடையாது… மும்பையை வறுக்கும் ரசிகர்கள்!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!