“போர், ரத்தம், விரோதம்” : சலார் புதிய ட்ரெய்லர்!

Published On:

| By Kavi

கே.ஜி. எப் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள பான் இந்தியா படம் “சலார்”. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சலார் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் சலார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

ADVERTISEMENT

Salaar Release Trailer - Tamil | Prabhas | Prashanth Neel | Prithviraj | Shruthi | Hombale Films

இந்நிலையில் இன்று (டிசம்பர் 18) சலார் படத்தின் மற்றொரு புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் ட்ரெய்லர் போலவே தற்போது வெளியான ட்ரெய்லரிலும் தொடக்கம் முதல் இறுதி வரை மாஸ் ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருக்கிறது.

ADVERTISEMENT

உயிர் நண்பர்கள் பரம விரோதிகளாக மாறுகின்றனர் என்பதே ஒன் லைன் கதை. சலார் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டத்தின் உச்சம். தற்போது வெளியாக இருக்கும் சலார் படத்தின் முதல் பாகத்திற்கு சலார் Part 1 – Ceasefire என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சலார் படத்தின் புதிய ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

– கார்த்திக் ராஜா

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“அவசியமின்றி வெளியே வராதீங்க”: தென் மாவட்ட மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்!

மிதக்கும் தென் மாவட்டங்கள் : உதவிக்கு வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்: மோடியிடம் நேரம் கேட்கும் ஸ்டாலின்

பில்லா : வெற்றியின் பின்னிருந்த அபாயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share