ADVERTISEMENT

பிரபாஸின் ‘சலார்’: டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய அரசு!

Published On:

| By Monisha

salaar movie ticket price

பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள படம் சலார். இந்த படத்திற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கி விட்டது.

தெலுங்கில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களுக்கான அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை அந்த மாநில அரசுகள் தான் நிர்ணயம் செய்கின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அந்த வகையில் சலார் ரிலீஸை முன்னிட்டு தெலங்கானாவில் சிங்கிள் தியேட்டர்களில் தற்போது இருக்கும் டிக்கெட் விலை உடன் ரூ.65 அதிகமாகவும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ. 100 அதிகமாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என தெலங்கானா அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தெலங்கானாவில் சிங்கிள் தியேட்டர்களில் டிக்கெட் விலை 253 ரூபாய், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை 413 ரூபாய் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

தெலங்கானா அரசை போலவே ஆந்திர அரசும் சலார் ரிலீஸ் முன்னிட்டு சிங்கிள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் டிக்கெட் விலையில் 40 ரூபாய் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆந்திராவில் சிங்கிள் தியேட்டர்களில் டிக்கெட் விலை 194 ரூபாய், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 224 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

மேலும் டிசம்பர் 31 வரை மட்டுமே இந்த புதிய கட்டணம் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி குறிப்பிட்ட சில தியேட்டர்களில் அதிகாலை 1 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் நிச்சயமாக சலார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்: தயாரிப்பாளரின் திட்டத்திற்கு கமல் ஆதரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share