VIDEO: மின்வெட்டு.. நள்ளிரவில் சென்னை ஈசிஆரில் பொதுமக்கள் போராட்டம்- பெரம்பூரிலும் மறியல்!

Published On:

| By Mathi

Power Cut ECR

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) பகுதிகளில் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கி உள்ளது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் இரவிலும் போராட்டங்களை நடத்துகின்றனர். சில இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகையிடப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று நள்ளிரவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR ஈசிஆர்) பகுதிகளில் 1 மணிநேரத்துக்கும் மேலாக மின்வெட்டு இருந்தது. இதனால் கொந்தளித்து போன பொதுமக்கள் நள்ளிரவில் ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டைக் கண்டித்து இரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share