அதி கனமழை எதிரொலியாகத் தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 13) ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.
ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 21 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நவம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா