புதுச்சேரியின் கருப்பழகி என அழைக்கப்பட்டு வந்த இளம் மாடல் சான் ரேச்சல் இன்று ஜூலை13-ந் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து புதுச்சேரி உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Puducherry Model Shaun Rachel
புதுச்சேரி காராமணி குப்பத்தை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி சங்கர பிரியா (எ) சான்ரேச்சல். 25 வயதான இவர் காராமணி குப்பத்தில் உள்ள தனது வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டார். சிறுநீரகப் பிரச்சனைக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணங்கள் குறித்து புதுச்சேரி மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவயதில் தாயை இழந்து , தந்தையின் ஆதரவுடன் வளர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல், தனது கறுமை நிறத்தினை முன்னிலைப்படுத்தி மாடலிங் துறையில் தனது திறமை காரணமாக புகழ்பெற்று இருந்தார்
2020 – 2021 ஆம் ஆண்டுகளில் மிஸ் பாண்டிச்சேரி பட்டத்தையும் ,
2019ல் மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு என்ற பட்டத்தையும் , மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் என்ற பட்டத்தையும் சான் ரேச்சல் பெற்றுள்ளார். கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டமும் சான் ரேச்சல் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. பல்வேறு அழகி போட்டிகளிலும் பங்கேற்றுள்ள அவர், புதுச்சேரியில் மாடலிங் பயிற்சி வகுப்புக்களையும் எடுத்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று தனது வீட்டில் அதிக எண்ணிக்கையிலான ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூக்க மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் ,ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சான் ரேச்சல் அழகு போட்டியில் பங்கேற்பது மட்டுமின்றி , பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வந்துள்ளார். இதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்து உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சான்ரேச்சல் கடந்த ஆண்டு புதுச்சேரியைச் சேர்ந்த சத்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி இதையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே தற்கொலைக்கான காரணம் குறித்து புதுச்சேரி மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியின் கருப்பழகி சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
