ஹிருதயத்தில் சூக்சிகன், டிராபிக், மில்லி, வேட்டா ஆகிய மலையாளப் படங்களை இயக்கிய பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை கொச்சியில் நேற்று கல்லீரலில் பிரச்னையால் மரணமடைந்தார்.
இவருக்கு மலையாள திரை உலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. இவரது ‘வேட்டா’ படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. மேலும் அவரது ‘டிராபிக்’ என்ற படம் தமிழில் சேரன் நடிப்பில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.