பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வதற்கான அரசாணையை, தமிழக அரசு நேற்று (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த செப்டம்பர் 22, 27 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தியது.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும், ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும்,
நாடு முழுவதும் 274 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு, 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருந்த உத்தரவு குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967 பிரிவின் கீழ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக தமிழக அரசு அறிவிக்கிறது.

இதன்காரணமாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கையை தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.
செல்வம்