உக்ரைன் போர் குறித்து பேசியபோது கண்ணீர்விட்ட போப்

Published On:

| By Minnambalam

உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது சில நொடிகளில் கண்ணீர்விட்டு அழுத போப்பின்  செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார். தனது உரையின் நடுவில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

ADVERTISEMENT

அதை தொடர்ந்து, உரையாற்றிய போப், உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும் போது திடீரென துயரம் தாளாமல் அமைதி ஆகி விட்டார். சில நொடிகளில் கண்ணீர் விட்டு அழுதார்.

இதைக்கண்ட போப்பின் அருகில் இருந்த ரோம் மேயர் ராபர்டோ குவால்டியேரி உள்ளிட்ட கூட்டம், அவரால் பேச முடியவில்லை என்பதை உணர்ந்து, அவரைத் தேற்றினர்.

ADVERTISEMENT

பின்னர் அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார். அப்போது அவர்,

“மாசற்ற கன்னியே, இன்று நான் உக்ரைன் மக்களின் நிலையை உங்களிடம் கொண்டு வர விரும்பினேன். உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களது வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்” என்றார்.

இதனிடையே உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உலக நாடுகளின் மக்கள் படும் துன்பத்தைக் கண்டு போப் வருந்தும் காட்சி பார்க்கும் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-ராஜ்

இமாச்சல் முதல்வர்: முடிவெடுக்கும் பிரியங்கா காந்தி

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஃபுட் பாய்சன்: காரணங்களும் தீர்வுகளும்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share