பேனா நினைவுச் சின்னம்… தவறான முன்னுதாரணம்: பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு!

Published On:

| By Monisha

kalaignar pen statue

பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தவறான முன்னுதாரணம் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் வைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்காமல் கடற்கரையில் அமைக்கலாம் என்று எதிர்ப்புகள் எழுந்தது.

இந்நிலையில் 15 நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க போதுமான ஆய்வுகள், தரவுகளின்றி தயாரிக்கப்பட்ட EIA வை (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) பரிசீலித்து யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

பாஜக எம்.பி மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

பேனா நினைவுச் சின்னத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share