‘இரண்டாவது சனிக்கிழமை… இன்றைக்கு என்ன சமைப்பது….’ இந்தக் கேள்வி வீக் எண்டில் ரொம்பவே கவனம் பெறும். மற்ற நாட்களை போலல்லாமல் நிதானமாக, கொஞ்சம் வித்தியாசமான சமையலே பெரும்பாலும் வீக் எண்டில் பலரது சாய்ஸாகவும் இருக்கும். இந்த வார வீக் எண்டுக்கு அசத்த அப்படியோர் அருமையான டிஷ், இந்த பூரி பரோட்டா.
என்ன தேவை?
மைதா மாவு – 2 கப்
உப்பு – அரை டீஸ்பூன்
சோள மாவு – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மைதாவுடன் சோள மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும். மேலே சிறிதளவு எண்ணெய் தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை அடித்துப் பிசைய வேண்டும். பிசைந்த மாவில் நெய் தடவி மீண்டும் பிசையவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கிப் பூரிகளாகத் தேய்க்கவும். சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பாலக் தாலி பித்
கிச்சன் கீர்த்தனா : மக்னா மலாய் கறி