அம்மா இப்படி செய்யாதீர்கள்… இன்போஸிஸ் சுதா மூர்த்திக்கு புத்திமதி சொன்ன கண் தெரியாத பூசாரி!

Published On:

| By Kumaresan M

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவரின் மனைவி சுதா ஆகியோர் மிக எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள். தற்போது, சுதா தனக்கு தமிழ்நாட்டில் நடந்த அனுபவம் பற்றி உருக்கத்துடன் கூறியுள்ளார்.

ஒருமுறை தமிழ்நாட்டுக்கு சுதா மூர்த்தி காரில் வந்துள்ளார். குக்கிராமம் ஒன்றில் கார் வந்த போது, திடீரென சுதா மூர்த்தியின் கார் பழுதாகி விட்டது. காரை ரிப்பேர் செய்யும் வரை அருகிலுள்ள கோயிலில் இருங்கள் என்று கார் டிரைவர் கூறியுள்ளார். உடனே, அந்த கோவிலுக்குள் பார்வையற்ற பூசாரியும் அவரது மனைவியும் இருந்துள்ளனர்.

தங்களுடைய கோயிலுக்கு யாரோ ஒரு பெண்மணி வந்துள்ளார் என்பதை அறிந்ததுமே, பார்வையற்ற பூசாரியும், அவரது மனைவியும், அன்புடன் வரவேற்றுள்ளனர். கோயிலில் சுவாமிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்துள்ளார் பூசாரி. அப்போது, சுதா மூர்த்தி தன்னுடைய காணிக்கையாக 100 ரூபாய் கொடுத்துள்ளார். மேலும், அந்த தம்பதியினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ரூ.20,000 அனுப்பி வைப்பதாக பூசாரியிடம் சுதா மூர்த்தி கூறியுள்ளார். ஆனால், அந்த பார்வையற்ற பூசாரி, அந்த பணத்தை வேண்டாமென்று பணிவுடன் மறுத்துவிட்டாராம்.

”அம்மா, நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. இந்த தவறை உங்கள் வாழ்க்கையில் மறுபடியும் செய்யாதீர்கள்.. நீங்கள் தரும் இந்த பணம் எங்கள் நிலைமையை மேம்படுத்திக் கொள்ள உதவலாம். ஆனால், நீங்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு சுமையாக மாறிவிடும். இப்போது என்னையும் என்னுடைய மனைவியையும் இந்த கிராம மக்களே நன்றாக பராமரித்து கொள்கிறார்கள்.

எங்களிடம் இருப்பதை நினைத்து, அமைதி கொள்கிறோம். அதை அங்கீகரிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றாராம்.

உண்மையான செல்வம் என்பது பணம், பொருள் அல்ல, இருப்பதை மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் என்பதை பூசாரியின் வார்த்தைகள் தனக்கு உதவியதாக சுதா மூர்த்ததி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“நகைச்சுவையை பகைசுவையாக்காதீங்க” :ரஜினியின் பதில் – துரைமுருகன் விளக்கம்!

ரசிகர் கொலை… நடிகர் தர்ஷன் சிறையில் ஜாலியோ ஜிம்கானா! – 7 பேர் சஸ்பெண்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share