பூங்கா நகரம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: ஸ்பெஷல் என்ன?

Published On:

| By Selvam

பூங்கா நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இன்று (செப்டம்பர் 18) வெளியிட்டார்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் பூங்கா நகரம்.

ADVERTISEMENT

திருவண்ணாமலையை கதைக்களமாக கொண்டு சஸ்பென்ஸ் கலந்த காமெடி ஹாரர் த்ரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தை அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார்.

ADVERTISEMENT

இப்படத்தின் கதாநாயகனாக தமன் குமார், கதாநாயகியாக ஸ்வேதா டோரத்தி , பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்ய சி.எம் இளங்கோவன் எடிட்டிங், பாடல்கள் நா.ராசா எழுத இசை ஹமரா C.V இசையமைத்துள்ளார். ராபர்ட் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ADVERTISEMENT

பூங்கா நகரம் படத்தின் முதல் தோற்றத்தை இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் இன்று வெளியிட்டார்.

இந்த போஸ்டரில் நாயகன் தமன், நாயகி ஸ்வேதா டோரத்தி இருவரும் கோபமாக காட்சியளிக்கின்றனர். இரவு நேரத்தில் பலத்த காயத்துடன் சாலையில் கிடக்கும் நபர் ஒருவரை காவல்துறையினர் இருவர் மீட்கும் காட்சிகள் உள்ளது. பூங்கா நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இராமானுஜம்

காவிரி: மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி-க்கள் நாளை சந்திப்பு!

நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப கதையில் ஜெயம் ரவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share