ADVERTISEMENT

பூந்தமல்லி டூ போரூர்… ஓட்டுநர் இல்லா மெட்ரோ சோதனை ஓட்டம்!

Published On:

| By Selvam

Poonamallee to Porur Driverless Metro Test Run

Poonamallee to Porur Driverless Metro Test

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கியுள்ளது.Run

ADVERTISEMENT

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ச்சுனன், நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். Poonamallee to Porur Driverless Metro Test Run

Poonamallee to Porur Driverless Metro Test Run

சோதனை ஓட்டம் Poonamallee to Porur Driverless Metro Test Run

இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறும்போது, “இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4-ல் உயர்மட்ட வழித்தடத்தில் இன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வழித்தட சோதனை மெட்ரோ ரயில் திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ADVERTISEMENT

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி நாங்கள் சீராக முன்னேறி வருகிறோம்” என்று கூறினார்.

மெட்ரோ அதிகாரிகள் கூறும்போது, Poonamallee to Porur Driverless Metro Test Run

ADVERTISEMENT

“இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது மற்றும் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Poonamallee to Porur Driverless Metro Test Run

தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ ரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும்.

படிப்படியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும். இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்” என்கிறார்கள்.

Poonamallee to Porur Driverless Metro Test Run

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share