பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) ‘நஷா’ என்ற படத்தின் மூலமாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம், போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார்.
கடைசியாக 2018-ம் ஆண்டு ‘ஜர்னி ஆஃப் கர்மா’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் படங்களில் பெரிதாக அவர் நடிக்கவில்லை.
2௦2௦-ம் ஆண்டில் தன்னுடைய காதலன் சாம் பாம்பேயை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே, கடந்த 2௦11-ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் அதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (பிப்ரவரி 1) மரணம் அடைந்தார்.
பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உயிரிழந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூனம் பாண்டேவின் இந்த திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக வெற்றி கழகம்: விஜய் புதிய கட்சி!
“கைது செய்வதுதான் மோடியின் நோக்கம்” : 5ஆவது முறையாக ED சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்