ADVERTISEMENT

மகளை கதாநாயகியாக களம் இறக்கும் லிவிங்ஸ்டன்

Published On:

| By Minnambalam Desk

Livingstons daughter Jovita as the heroine

சுமார் பத்து வருடம் முன்பு விஜய் டிவி யில் வந்த ஒரு ‘நீயா நானா’ நிகழ்ச்சி.

ADVERTISEMENT

சினிமாவை நம்பலாம் — நம்ப வேண்டாம் என்று இரு தரப்பாக சினிமாக்காரர்களே பேசிய நிகழ்ச்சி அது.

ADVERTISEMENT

அதில் கலந்து கொண்ட லிவிங்ஸ்டன், “சினிமாவை நம்பவே நம்பாதீர்கள். அது ரிஸ்க்கானது. ஏன்டா சினிமாவுக்கு வந்தோம் என்று நினைக்கிறேன். என் பிள்ளைகளை சினிமாவில் விட மாட்டேன் அவர்களுக்கு சினிமா சுத்தமாக பிடிக்கவில்லை., சினிமா என்றாலே கோபப்படுகிறார்கள்” என்கிறார்.

ஓவர் டூ டுடே …!

ADVERTISEMENT

லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது….

இப்படத்தைப் பற்றி இயக்குநர் கே.எஸ் கிஷன் கூறுகையில் “இது ஒரு ஹாரர் திரில்லர் படம். இதில் கதாநாயகியாக ஜோவிட்டாவும் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன், ஆதர்ஷ், மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் சேர்ந்து விஜே விஜய், கிருத்திகா நடிக்கிறார்கள்.

ADVERTISEMENT

இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் எனும் பேனரில்
தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே ஷெட்யூலில் நடத்தி முடிக்க உள்ளோம்” என்றார்.

மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ?!

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share